கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் |

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் திரைக்கு வந்தபோது படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பதாக சொல்லி ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் டிரோல் செய்தனர். என்றாலும் விமர்சனங்களை கடந்து அந்த படம் வெற்றி பெற்றது . இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை வெளியிட தொடங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் எங்களால் படம் பண்ண முடியாது. அதோடு கூலி படத்தை எடுத்துக் கொண்டால் அது டைம் ட்ராவல் படமோ, எல்சியூ படமோ அல்ல. என்றாலும் ரசிகர்களாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
காரணம் ரஜினி சார் படம் என்பது மட்டுமின்றி நான் இயக்கும் படங்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நான் படம் எடுக்க மாட்டேன். நான் எழுதக்கூடிய கதை ரசிகர்களை திருப்திப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை அந்த படம் அவர்களை திருப்தி படுத்தவில்லை என்றால் அடுத்த படத்தில் அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்வேன். மேலும் ஒரு படத்தின் சக்சஸ் என்பது கோடி கோடியாக வசூலிப்பதில் மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி விட்டால் அதுவே சக்சஸ்தான் என்கிறார் லோகேஷ் கனகராஜ்.