'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் 'சிங்கம்புலி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ். ஆரம்பத்தில் மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, ஒருகட்டத்தில் வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க, மலையாளத்தில் முக்கியமான நடிகையானார் ஹனிரோஸ்.. ஆனாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை
கடைசியாக 2014-ல் வெளியான கந்தர்வன் என்கிற படத்தில் நடித்திருந்த ஹனி ரோஸ் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சுந்தர்.சி ஹீரோவாகவும், ஜெய் சைக்கோ வில்லனாகவும் நடித்துவரும் பட்டாம்பூச்சி என்கிற படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹனி ரோஸ். பத்ரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ஹனி ரோஸுக்கு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.