ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தற்போது வம்சி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். காதல் சென்டிமெண்ட் உடன் குடும்ப கதையாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் 67ஆவது படம் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கு முன்னதாகவே விஜய் 67வது படத்தின் அறிவிப்பை வெளியிடுவதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு விஜய் 66வது படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அக்டோபர் மாதம் முதல் விஜய்யின் 67வது படத்தை தொடங்குவதற்கும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது .