ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா, சமந்தா இருவரையும் காதலித்து அவர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தை படும் நாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
டிரைலரின் ஆரம்பமே குஷி படத்தில் இடம்பெற்ற அணையப் போகும் ஒரு விளக்கை அணைய விடாமல் தடுக்க, விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா மூன்று பேருமே ஓடிவந்து தங்களது கைகளால் விளக்கு அணையாமல் தடுக்கிறார்கள். இப்படி தொடங்கும் இந்த டிரைலரில் நானும் ரவுடி தான் படத்தில், ரவுடி கிட்ட கூட்டிட்டு போக முடியுமா? என்று நயன்தாரா பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது. அதோடு ஹோம்லியாக நயன்தாராவும் அல்ட்ரா மாடர்னாக சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு ஜாலியான காதல் கதையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியிருப்பதை இந்த டிரைலர் வெளிப்படுகிறது. அதனால் ரசிகர்களிடம் இப்பட டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாகவே 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று, டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.