சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா |
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி இயக்கி வரும் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார் விஜய் . அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தந்தையாக சரத்குமாரும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் அண்ணனாக பிரபல நடிகர் மோகன் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அப்படத்தில் விஜய்யின் சகோதரராக இயற்கை, தில்லாலங்கடி என பல படங்களில் நடித்த ஷாம் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இவர்கள் தவிர தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பரிச்சயமான இரண்டு பிரபல நடிகர்களிடம் விஜய்யின் சகோதரராக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளன.