பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தித் திரையுலகத்தில் கதாநாயகியாக அறிமுகமான அறிமுகப் படத்திலேயே 1000 கோடி வசூலைப் பெற்ற அதிர்ஷ்ட ஹீரோயினாக சாரா அர்ஜுன் தடம் பதித்துள்ளார். ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து இந்த மாதம் 5ம் தேதி வெளிவந்த 'துரந்தர்' படம் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இப்படம் அறிவிக்கப்பட்ட போது, 40 வயதான ரன்வீர் சிங்கிற்கு 20 வயதான சாரா அர்ஜுன் ஜோடியா என கடும் விமர்சனங்கள் எழுந்தது. டீன்ஏஜ் பருவத்தைக் கடந்த சாராவின் முகம் அவர் 'பேபி' நட்சத்திரமாக இருந்த போது இருந்த அதே குழந்தைத் தனத்துடன் இருந்ததே அதற்குக் காரணம். அந்த விமர்சனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தற்போது படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
2011ல் வெளிவந்த '404' என்ற ஹிந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. அதே வருடத்தில் தமிழில் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து வெளிவந்த 'தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 'சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் பதின்ம வயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் நடித்தார்.
'துரந்தர்' தந்த வெற்றியால் ஹிந்தியில் சாராவுக்கு அடுத்தடுத்து புதிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.