விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? | 'ஜனநாயகன்' வழக்கு விவகாரம் : அடுத்து என்ன நடக்கலாம்? | மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி |

ஹிந்தியில் ஆதித்ய தார் இயக்கத்தில் தன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர். இப்படத்தில் அவருடன் அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் திரைக்கு வந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது.
திரைக்கு வந்த ஒன்பது நாட்களில் இதுவரை 454.72 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த படம் இரண்டாவது சனிக்கிழமை அன்று அதிகபட்சமாக 55 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த துரந்தர் படத்தை தெலுங்கில் வெளியிடுமாறு தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதனால் தற்போது தெலுங்கு டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகிற டிசம்பர் 19ம் தேதி இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.