இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் ‛ஜெயிலர்'. 650 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகும் நிலையில், ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிகப்படியான நாடுகளில் இந்த படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.