விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் |

தெலுங்கு இளம் ஹீரோக்களில் ஒருவர் நாகசைதன்யா. அக்னினேனி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக நடித்து வருகிறார். தந்தை நாகார்ஜுனா அவருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். நாகசைதன்யாவுடன் சில படங்களில் இணைந்து நடித்த தமிழகத்தை சேர்ந்த சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடந்தது.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சமந்தா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டாவது திருமணம் இப்போதைக்கு இல்லை என்றும், சிங்கிளாக வாழ பிடித்திருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.
இந்தநிலையில் நாக சைதன்யாவுக்கும், தமிழில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த நிலையில் நாகசைதன்யா-சோபிதா துலிபாலா திருமணம் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்னா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இரவு 8.30 மணிக்கு சோபிதா துலிபாலா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்தில் இருவீட்டு குடும்பத்தினர் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.