ஒரு காதல் வந்திருக்கு : மத்தாப்பாய் பூரிக்கும் துஷாரா | புது பாடகர்கள், கவிஞர்களை தேடுகிறேன் : 'பற பற பற பறவை' ரகுநந்தன் | தமிழ் பொண்ணுங்க தான் அழகு... - சந்தோஷத்தில் சாய் பிரியா | 'குயின் ஆப் மெட்ராஸ்' : துணை நடிகை மரிய ரோஸ்லியின் கதை | 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களை விட 'பாகுபலி 2' தான் டாப் | நாகசைதன்யா - சோபிதா பற்றி அவதூறு ஜோதிடம் சொன்ன ஜோதிடரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு | பாலகிருஷ்ணா ரியாலிட்டி ஷோவில் துல்கர் சல்மான் : சர்ப்ரைஸ் கொடுத்த மம்முட்டி | மம்முட்டியின் தலைமையில் 40 ஜோடிகளுக்கு நடைபெற்ற மெகா திருமணம் | நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது | புது முகங்களுடன் வெளிவரவிருக்கும் புது சீரியல் |
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்தும் பெற்றனர். இந்த நிலையில் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, கடந்த ஆகஸ்ட்டில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் இவர்கள் திருமண தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான ஆன வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா, சோபிதா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என்றும் அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார்.
இவரது பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வேணு சுவாமி இது குறித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மேலும் தன்னை மகளிர் உரிமை ஆணையத்தில் இருந்து விசாரிக்க அழைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தடையும் பெற்றிருந்தார்.
தற்போது தெலுங்கானா உயர்நீதிமன்றம் இந்த தடையை விலக்கியுள்ளதுடன் மகளிர் உரிமை ஆணையத்திற்கு இது குறித்து விசாரணை நடத்த அனுமதியும் அளித்துள்ளது. இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமை ஆணையம் தற்போது வேணு சுவாமியை அழைத்து விசாரிக்க துவங்கியுள்ளது.