குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலை ஆரம்பித்து வைத்த தென்னிந்திய படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த படம் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
அப்படத்திற்குப் பிறகு வெளிவந்த 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களும் 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தைத் தியேட்டர்களில் வந்து பார்த்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதில் பாதி தான் என படத்தின் தயாரிப்பாளரான ஷோபு எர்கட்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பாகுபலி 2' படத்திற்காக 10 கோடிக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதற்கான டிக்கெட் கட்டணம் 125 ரூபாய்தான். ஆனால், 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களுக்கு அதில் 50 சதவீத அளவுதான் மக்கள் தியேட்டர்களுக்கு வந்தார்கள். இனி வரும் படங்கள் 'பாகுபலி 2' படத்தின் வசூலை நெருங்கலாம். தற்போது டிக்கெட் கட்டணம் ரூ 300 வரை இருக்கிறது. அதிகம் பேர் பார்த்த படம் என்பதில் 'ஷோலே' படத்திற்குப் பிறகு 'பாகுபலி 2' படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படத்திற்கு 13 கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டன,” என்று தெரிவித்துள்ளார்.