ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியாக உள்ள தெலுங்கு திரைப்படம் 'ஹிட் - த தேர்ட் கேஸ்'.
2020ல் விஷ்வக் சென் நடித்து வெளிவந்த 'ஹிட் - த பர்ஸ்ட் கேஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு மற்ற மொழி ரசிகர்களையும் அப்படம் வெகுவாகக் கவர்ந்தது. அதற்கடுத்து 2022ல் அடிவி சேஷ் நடித்த 'ஹிட் - த செகண்ட் கேஸ்' படம் வெளியாகி அந்தப் படமும் வெற்றி பெற்றது.
தற்போது வெளியாக உள்ள 'ஹிட் 3' படத்தில் நானி கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யூடியூப் தளத்தில் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 21.3 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 20.4 மில்லியன் பார்வைகளைக் கடந்து 'ஹிட் 3' சாதனை புரிந்துள்ளதை தெலுங்கு ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். 'சலார்', 'பாகுபலி 2' டிரைலர்களின் 24 மணி நேர பார்வைகளுக்கும், 'ஹிட் 3' பார்வைகளுக்கும் சில லட்சம் பார்வைகள் மட்டுமே வித்தியாசம் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தால் சூர்யாவின் 'ரெட்ரோ' படத்திற்கு தெலுங்கில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.