கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. சினிமா தாண்டி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். விரைவில் உலகம் முழுக்க இசை சுற்றுப்பயணம் செல்கிறார். அதோடு அவர் பண்டைய தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வைத்து அகழ்வாராய்ச்சியும் செய்கிறார். இதை வைத்து ஆவணப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆதி, ‛‛நடிப்பு, இசை இரண்டையும் கஷ்டமாக பார்க்கவில்லை. இதற்கு தான் வாழ்க்கையில் ஆசைப்பட்டேன். நடிப்பு, இசை இரண்டும் வேறு வேறு. இசை உடன் ஒப்பிடும்போது நடிப்பு கொஞ்சம் கஷ்டமானது. காரணம் அதற்காக நிறைய மெனகெட வேண்டி உள்ளது. ஆனால் இசை எனக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சம் ஈஸியாக உள்ளது.
ஒருகாலத்தில் ஆல்பம் என்றால் என்ன என்று கேட்டாங்க. இன்றைக்கு சினிமா பாடல்களுக்கு இணையாக ஆல்பம் பாடல்களும் மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. வெளிநாடுகள் போன்று இனி இங்கேயும் ஆல்பத்திற்கு தனித்துறை வரும். அடுத்து ஜோ பட இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கும் ஒரு படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். இதற்காக மூன்று மாதங்களாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். ஜுன் அல்லது ஜுலையில் படப்பிடிப்பு துவங்கும். மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பாடல் கம்போசிங் நடக்கிறது. ஒரு பாடல் ரெடியாகிவிட்டது'' என்றார்.