அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்','டிரெயின்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகை சார்மி உடன் இணைந்து பூரி ஜெகன்நாத் தயாரிக்கவும் செய்கிறார். முக்கியே வேடத்தில் தபு நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான கடைசி இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இப்படியான நிலையில் அவர் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், ''என்னுடைய இயக்குநர்கள் முன்பு செய்த படைப்புகளை வைத்து அவர்களை நான் மதிப்பிட மாட்டேன். எனக்கு கதைப் பிடித்திருந்தால் அதில் நான் நடிப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்திரைப்படம் ஒரு முழுமையான அக்ஷன் படமாக இருக்கும். இப்படியான ஒரு கதை களத்தில் இதற்கு முன் நான் படம் நடிக்கவில்லை. நான் செய்த விஷயங்களையே மீண்டும் செய்யாமல் பயணிக்காத களங்களுக்கும் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்" என கூறினார்.