சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு |

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறேன் என்று கூறி அவ்வப்போது பரபரப்பு செய்திகளுக்கு தீனி போடுபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த அளவுக்கு மாஸ் கிடைத்திருக்காது என்று கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எப் 2 படம் குறித்தும் அதே பாணியில் கிண்டலாக விமர்சித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
இது குறித்து அவர் கூறும்போது, “கேஜிஎப் 2 படத்தை பார்க்க துவங்கியதுமே 15 நிமிடத்திற்கு மேல் என்னால் தொடர்ந்து அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அதன் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்காக பால்கனிக்கு வந்து வெளிக்காற்றை நன்றாக சுவாசித்து கொஞ்சம் யோகா பயிற்சி செய்து விட்டு அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்களை பார்த்தேன். மீண்டும் அதே போல தான் தொடர்ந்தது. இடைவேளைக்குப் பிறகு உன்னால் இந்த படத்தை முழுதாக பார்க்க முடியாது, பேசாமல் பார்ப்பதை நிறுத்தி விடு என்று என்னுடைய மனமே கட்டளையிட்டது.
அடுத்த முறை என்னுடன் ஒரு எழுத்தாளரையும் வைத்துக் கொண்டு இந்த படத்தை பார்த்தேன். அவரும் படம் பார்க்கும்போது இந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறதே ? எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் சொன்னேன்.. படத்தின் கதை பற்றி விவாதிக்கலாம். படத்தின் வெற்றி பெற்று விவாதிக்கவே முடியாது.. நம் இருவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கானோருக்கு பிடித்திருக்கிறது.. என்ன செய்வது ?” என்று கூறியுள்ளார் ராமகோபால் வர்மா.




