'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, தமிழில் அரண்மனை-4 படத்திற்கு பிறகு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் தமன்னா. அதன்பிறகு ஹிந்தியில் ஸ்திரி- 2 என்ற படத்திலும் ஆஜ் கி ராத் என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்த பாடலும் காவாலா பாடலைப் போன்று மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் ஹிந்தி சினிமாவில் இருந்து தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் நடனமாடும் ஒரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவியாக இருந்தால் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தமிழில் ரஜினி படம் என்பதற்காக ஜெயிலர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதேபோல் ஹிந்தியில் இயக்குனர் என் நண்பர் என்பதற்காக ஸ்திரி- 2 படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதை பார்த்துவிட்டு தொடர்ந்து அது போன்று ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாட என்னை அழைத்தால் எப்படி? என்று பாலிவுட் திரையுலகினருக்கு என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் தமன்னா.