சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர் பாசில் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் பஹத் பாசில். ஆனால் ஆரம்பத்திலிருந்து நல்ல கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு தனி பாதை போட்டு நடித்து வருகிறார்.
கடந்த மூன்று வருடங்களில் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகிலும் அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படத்திலும் கதாநாயகனாக இல்லாமல் அதே சமயம் வில்லனாக, குணச்சித்திர நடிகராக என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அந்தப் படங்களில் தனது நடிப்பை மற்றும் எல்லோருமே சிலாகித்து பேசும் விதமாக வைத்து விடுகிறார் பஹத் பாசில். அவர் பெரும்பாலும் பேட்டிகளில் பேசும்போது எல்லாம் தன்னை ஒரு ஹீரோவாகவோ நட்சத்திரமாகவோ கூறுவதில்லை. தான் ஒரு நடிகர் என்று மட்டுமே கூறுவார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பஹத் பாசில் குறித்து நடிகை ஊர்வசி பேசும்போது கூட, “தன்னை ஒரு நடிகர் என சொல்லிக் கொள்ளும் தைரியம் நிச்சயமாக பஹத் பாஸிற்கு மட்டும் தான் உண்டு. ஏனென்றால் மற்ற நடிகர்கள் தங்களை ஹீரோக்களாகவும் முன்னணி நட்சத்திரங்கள் ஆகவும் மாற்றிக் கொள்வதற்காகவே போராடுவார்கள். அதற்கான பாதையில் தான் செல்வார்கள். ஆனால் பஹத் பாசிலை பொறுத்தவரை அப்படிப்பட்ட ஒரு நடைமுறையை உடைத்து, மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை மட்டும் செய்கிறாரே.. அதனால் தான் அவர் நிச்சயமாக தனித்துவமான நடிகர் என தாராளமாக சொல்ல முடியும்” என்று புகழ்ந்துள்ளார்.