ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திகரனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ரத்னம்' படம் நாளை(ஏப்., 26) வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்துள்ளனர் விஷால், ஹரி. இந்நிலையில் இந்த படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு என்ன கதியாகும்'' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியின் போது தனது மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூறியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்னையால் தனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்னை வரலாம் என தெரிவித்து இருந்தார்.