என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : இன்று முக்கிய அறிவிப்பு | சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? |
மோகன்லால் மலையாளத்தில் தற்போது தன்னுடைய 360வது படத்தில் நடித்து வருகிறார். 15 வருடங்களுக்கு பிறகு நடிகை ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் மோகன்லால் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் அனிருத் இசையில் ஹிட்டடித்த ஜிந்தா பந்தா என்கிற பாடலுக்கு நடன கலைஞர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அது மட்டுமல்ல ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் ஹுக்கும் பாடலுக்கும் மேடையில் பெர்பார்மன்ஸ் செய்து அசத்தி ரசிகர்களின் கைதட்டலை அள்ளினார் மோகன்லால்..
தனது பாட்டிற்கு மோகன்லால் நடனம் ஆடியது குறித்து ஷாருக்கான் கூறும்போது, “இந்த பாடலை எனக்கு இப்பொழுது இன்னும் அதிக ஸ்பெஷலாக மாற்றியதற்காக நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் பாதியாவது சிறப்பாக நான் ஆடி இருந்திருக்கலாம். லவ் யூ சார். எனது வீட்டில் உங்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறேன். நீங்கள் தான் இந்த ஜிந்தா பந்தாவின் ஓ ஜி” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மோகன்லால், “உங்களைப் போல ஒருவராலும் ஆட முடியாது ஷாருக். நீங்கள் தான் எப்பொழுதும் ஜிந்தா பந்தாவின் ஓ ஜி ஆக இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. டின்னரை பற்றி கேட்கிறீர்களா ? நாம் ஏன் ஜிந்தா பந்தா பாடலை நமது காலை உணவின் போது சேர்ந்து பாடக்கூடாது ?” என்று பதில் அளித்துள்ளார்.