கோலாகலமாய் நடந்த சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் | மீண்டும் 'மயோசிடிஸ்' பிரச்னை: சிகிச்சை பெறும் சமந்தா | தமிழ் சினிமாவில் எதுவும் நடக்கவில்லை, கமிட்டியும் தேவையில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழா: இந்தியா முழுவதும் நடக்கிறது | 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது | சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம் | இலங்கை தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'ரத்தமாரே': ரஜினி வாழ்த்து | பிளாஷ்பேக்: 4 சகோதரர்கள் இணைந்து நடித்த படம் | நடன இயக்குனர் ஜானி மீது நடனப் பெண் புகார் | திருமண மோதிரம் 'மிஸ்ஸிங்' : மீண்டும் பிரிவு சர்ச்சையில் ஐஸ்வர்யா ராய் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படத்தின் தலைப்பு 'கூலி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான தலைப்பு அறிவிப்பு வீடியோ சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தங்க குடோனில் சிலர் தங்கத்தையும், ஆபரணங்களையும் அடுக்கிக் கொண்டிருக்க அங்கு அதிரடியாக என்ட்ரி கொடுத்து அவர்களை அடித்துப் போட்டு அந்த தங்கக் கட்டிகள் மீது ஹாயாக படுத்துக் கொண்டு சிரிக்கிறார் ரஜினி. அவரது வருகையை யாரோ ஒருவர் போனில் சொல்ல, கடைசியில் அவரிடமே போனில் பேசி ரஜினி சிரிக்கும் அந்த சிரிப்பு வில்லன் சிரிப்பா, நாயகன் சிரிப்பா என பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் இடம் பெற்ற பாடலான 'சம்போ சிவசம்போ' பாடலில் இடம் பெற்ற கண்ணதாசனின் வரிகளான...
“அப்பாவும் தாத்தாவும்
வந்தார்கள் போனார்கள்..!!
தப்பென்ன சரியென்ன
எப்போதும் விளையாடு..!!
அடப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே..!!
எப்பாதை போனாலும்
இன்பத்தை தள்ளாதே..!!
சோறுண்டு, சுகமுண்டு..
மதுவுண்டு மாதுண்டு..
சோறுண்டு
சுகமுண்டு மனமுண்டு என்றாலே
சொர்க்கத்தில் இடம் உண்டு...
போடா,”
என்ற வசனம் பேசி அந்த அடியாட்களைப் பந்தாடுகிறார். வசனம் பேசி முடித்த பின், ரஜினி, பூர்ணிமா ஜெயராம் நடித்து வெளிவந்த 'தங்கமகன்' படத்தில் இடம் பெற்ற இளையராஜா இசையமைப்பில், வந்த ''வா வா பக்கம் வா” பாடலை பயன்படுத்தியுள்ளார் அனிருத்.
இதற்கான வீடியோவில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
80களின் பாடல் வசனம், 80களின் பாடலின் பின்னணி இசை என 'ரெட்ரோ' டைப்பில் அந்தக் கால ரஜினியைப் பார்த்த பரவசத்தை ஏற்படுத்துகிறது இந்த வீடியோ.
டைட்டில் லுக் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=6xqNk5Sf5jo