மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சின்னத்திரை நடிகை ரச்சிதா அண்மையில் தான் புதுவீடு வாங்கி குடியேறினார். கடந்த சில மாதங்களாக சினிமா, சின்னத்திரை என எதிலுமே சரிவர வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த ரச்சிதா தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் தற்போது தனது 33-வது பிறந்தநாளை புதிதாக வாங்கிய வீட்டில் தனது தாயாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். கையில் ஒயின் கோப்பையை பிடித்தபடி போஸ் கொடுத்திருப்பதோடு '33 வயதாகியும்
எனது இளமையின் ரகசியம் இந்த ஒயின்தான்' என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவானது வைரலாக, பலரும் ரச்சிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். ரச்சிதாவின் பிறந்தநாளை முன்னிடடு அவர் நடித்து வரும் பயர் படத்தில் இருந்து அவரது கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு நேற்று வாழ்த்து சொல்லியது.