ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் மன்சூர் அலிகான். பெரும்பாலும் வில்லனாக நடித்தவர் சில படங்களில் ஹீரோவாகவும், சமீபகாலமாக காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார். தேர்தல் வந்தாலே இவரும் போட்டியிடுகிறேன் என களமிறங்கி விடுவார்.
தேசிய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை துவங்கி, தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மக்களோடு மக்களாய் கலந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவு வரும் முன்பே காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான மனுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் இன்று சென்னையில் நேரில் வழங்கினார் மன்சூர் அலிகான்.