அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
படம் : வேட்டையாடு விளையாடு
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ்
இயக்கம் : கவுதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பு : மாணிக்கம் நாராயணன்
மின்னலே, காக்க காக்க என, ஹிட் கொடுத்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், மூன்றாவதாக கமலுடன் இணைந்து வேட்டையாடு விளையாடு என, களமிறங்கி, ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்தார். காக்க காக்க படத்தின் மூலம், ஸ்டைலிஸ் போலீஸ் கதாபாத்திரத்தை, இயக்குனர் அறிமுகப்படுத்தி இருந்தார். இப்படத்திலும், அதே போன்ற பாத்திர படைப்பு தான் இடம்பெற்றிருந்தது.
தசாவதாரம் கதையை, கவுதம் தான் இயக்க வேண்டும் என, கமல் விரும்பினார். ஆனால், தன் பாணியில் படம் இயக்குவேன் என, கவுதம் கூறியதால், வேட்டையாடு விளையாடு உருவானது. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமாக கொலை செய்யும் இரண்டு சைக்கோ வில்லன்களை, போலீஸ் அதிகாரியான கமல், வெளிநாடு சென்று எப்படி துப்பறிகிறார் என்பது தான், படத்தின் திரைக்கதை.
கமல், டி.ஜி.பி., ராகவனாகவே உருமாறியிருந்தார். அவரின் உடல்மொழி அவ்வளவு அழகு. 'என் கண்ணு வேணுமுன்னு கேட்டியாமே...' என்பது முதல், 'சின்ன பசங்களா யாருகிட்ட...' என்பது வரை, கமலின் நடிப்பு, 'வவ்'ரகம்.
கமலினி முகர்ஜியும், கண்ணுக்கு குளுமையாக இருந்தார். ஒரு குழந்தைக்கு தாயாகவும், விவகாரத்து ஆனவராகவும் ஜோதிகாவின் பாத்திர படைப்பு அருமையாக இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும், தாமரையின் வரிகளும், படத்தின் வெற்றிக்கு, முக்கிய காரணமாக இருந்தது.
'சைக்கோ' கொலைக்காரர்களாக டேனியல் பாலாஜியும், சலீம் பேக்யும் மிரட்டியிருந்தனர். சென்னை, கோவா, மதுரை, நியூயார்க் என, ரவிவர்மனின் கேமரா, ஓவியம் தீட்டியிருந்தது. கவுதம் வாசுதேவ் மேனனின், படங்களின் தலைப்பும், கதாபாத்திரங்களின் பெயர்களும் துாய தமிழில் இருக்கும்; ஆனால் வசனங்கள், ஆங்கிலத்தில் இருக்கும். இப்படத்திலும் அதே கதை தான்.
வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என, கவுதம் கூறியிருந்தார். நாங்கள் காத்திருக்கிறோம், ப்ரஸ் ஆன ராகவனை மீண்டும் பார்க்க!
குற்றவாளிகளை வேட்டையாடு விளையாடு!