டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழில் ஜோதிகா நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. திருமணத்துக்குபின் ரீ என்ட்ரி ஆகி ‛36 வயதினிலயே, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே' உட்பட பல படங்களில் நடித்தார். பின்னர், மும்பையில் வீடு மாற தமிழ் படங்களை குறைத்துவிட்டார். இந்தியில் ‛சைத்தான், ஸ்ரீகாந்த்' போன்ற சில படங்களிலும், ‛டப்பா கார்டெல்' உள்ளிட்ட வெப் சீரியலிலும் நடித்தார். ஆனால், எதுவும் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. சில படங்கள் வெற்றி அடையவில்லை. இதனால், தமிழ், இந்தியில் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.
பல கதைகள் கேட்பவர், எனக்கு செட்டாகாது. ஹிட்டாகாது என்று ஒதுக்கிவிடுகிறாராம். அவரின் 2டி நிறுவனமும் முன்போல அதிக படங்களை தயாரிப்பது இல்லை. கணவர் நடிப்பு, குழந்தைகள் படிப்பு, பெற்றோர்கள் கவனிப்பில் கவனம் செலுத்துகிறார். அதனால், சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இப்போது ஒரு வெப்சீரியலில் மட்டும் நடிக்கிறார் என்கிறார்கள் அவரின் தோழிகள்.