சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

கலைத்துறையில் இருந்து இப்போது ராஜ்யசபாவுக்கு 2 எம்பிகள் வந்துவிட்டார்கள். பாஜ அரசு சார்பில் ராஜ்யசபா எம்பி ஆகப்பட்டு இருக்கிறார் இளையராஜா. இப்போது திமுக தயவில் கமல்ஹாசனும் எம்பி ஆகி இருக்கிறார். இருவரின் தேர்ந்தெடுப்பு முறை வெவ்வேறு என்றாலும் இரண்டு பேருமே தமிழக ராஜ்யசபா எம்பி என்ற கணக்கில் வருகிறார்கள். ராமராஜன், நெப்போலியன், சரத்குமார், மறைந்த ஜே.கே. ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் வரிசையில் இப்போது இளையராஜா, கமல்ஹாசனும் பார்லிமென்ட் சென்று இருக்கிறார்கள்.
இதுவரை சினிமாவுக்காக, தனது கலைக்காக பார்லிமென்டில் பெரிதாக பேசவில்லை இளையராஜா. கமல்ஹாசனாவது பேச வேண்டும். தான் சார்ந்த சினிமா வளர்ச்சிக்காக டில்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் கோலிவுட்டில். இவர்களை தவிர, குஷ்பு, விந்தியா, ராதிகா போன்றவர்களும் எப்படியாவது எம்பி ஆகி, டில்லிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.