ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் |

'கேட்டரிங்' தொழில் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ல் வெளிவந்த 'மெஹந்தி சர்க்கஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பெண்குயின்' படத்தில் நடித்தார். குக் வித் கோமாளி டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற தனது உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் மனைவி உடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்கள் இன்னும் விவாகரத்து கூட பெறவில்லையாம்.
அப்படி இருக்கையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை ஜாய் கிரிஸ்டலா வெளியிட்டு, தான் தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார். ஜாய் கிரிஸ்டலாவிற்கும் இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே ‛பொன்மகள் வந்தாள்' பட இயக்குனர் பிரெட்ரிக்கை திருமணம் செய்து, அவரைவிட்டு பிரிந்தார்.
இதனிடையே ரங்கராஜ் - கிரிஸ்டலா திருமணத்தை வைத்து வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மனைவி, பிள்ளைகள் உள்ள சூழலில் இப்படி செய்யலாமா என ரங்கராஜையும், கிரிஸ்டலாவையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஜாய் கிரிஸ்டலாவை ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛சில பயணங்கள் அமைதியாக தொடங்கினாலும் நம்பிக்கையுடன் வளரும். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவியாக (திரு மற்றும் திருமதி ரங்கராஜ்) எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். எங்கள் காதல் அன்பு, கண்ணியம், முழு மனதுடன் மற்றும் மரியாதையுடன் துவங்கியது. இந்தாண்டு நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.