மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள், ஒரு சில சிங்கள படங்களுக்கு இசை அமைத்திருப்பார்கள். ஆனால் தொடர்ச்சியாக சிங்கள படங்களுக்கு இசை அமைத்து ஆஸ்தான இசை அமைப்பாளராக இருந்தவர் சுசர்லா எஸ்.தட்சிணாமூர்த்தி.
அடிப்படையில் தெலுங்கு இசை அமைப்பாளரான இவர் சர்வாதிகாரி, வளையாபதி, கல்யாணி, வேலைக்காரி மகள், மங்கையர் திலகம், அலிபாபாவும் 40 திருடர்களும் உள்பட ஏராளமான தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார் . ஏராளமான தமிழ், தெலுங்கு பாடல்களையும் பாடி உள்ளார். சொந்தமாக இசை தட்டு நிறுவனமும் நடத்தி வந்தார்.
'சுஜாதா' என்ற சிங்கள படத்தின் மூலம் இலங்கை திரையுலகில் அறிமுகமான இவர் அதன்பிறகு அங்கு தயாராகும் படங்களுக்கு தொடர்ச்சியாக இசை அமைத்தார். தனது 90வது வயதில் 2012ம் ஆண்டு சென்னையில் காலமானார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது, தான் மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை என்றும், மரணம் அடைய விரும்புவதாகவும் இவர் சொன்னதாக சொல்வார்கள். என்றாலும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.