சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சென்னையில் நடந்த ‛ரெட் பிளவர்' படவிழாவில் பேசிய நடிகர் சங்க செயலாளர் விஷால், இனி வரும் காலங்களில் முதல் 3 நாட்கள், தியேட்டர் வாசல்களில் பப்ளிக் ரிவியூ எடுக்க யு-டியூப் சேனல்கள், மீடியாவை அனுமதிக்ககூடாது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். முதல் 3 நாட்கள் படம் ஓடினால் நல்லது. அடுத்த வசூலையும் இப்படிப்பட்ட ரிவியூ கெடுத்து விடுகின்றன என்று பேசினார்.
விஷால் பேச்சுக்கு ஓரளவு ஆதரவும், நிறைய எதிர்ப்பும் வந்தன. குறிப்பாக, சினிமாவில் உள்ளவர்கள் விஷால் சொல்வதை ஏற்க முடியாது. சின்ன படங்களுக்கு பப்ளிக் ரிவியூ அவசியம், படம் நல்லா இருந்தால் ஓடும், இல்லாவிட்டால் என்ன செய்தாலும் ஓடாது என்றனர்.
விஷால் பேசியபின் பல படங்கள் வந்துவிட்டன. அந்த சமயங்களில் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்தில் பேட்டி எடுக்க யாரும் தடை விதிக்கவில்லை. எந்த சினிமா சங்கமும் இந்த விஷயத்தில் கூடி பேசி எந்த முடிவும் எடுக்கவில்லை. விஷால் பேச்சை பலரும் நிராகரித்துவிட்டதாகவே தெரிகிறது.