சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

கேரளாவில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள திரையுலகில் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக பல நடிகைகள், தாங்கள் வாய்ப்புக்காக நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டினார்கள். போலீசிலும் புகார் அளித்தார்கள். குறிப்பாக மலையாள நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நடிகர்கள் கூட இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிலர் கைதும் செய்யப்பட்டார்கள். இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று நடிகர் சங்க தலைவரான மோகன்லால் ராஜினாமா செய்தார். மற்ற உறுப்பினர்களும் கூண்டோடு அவருடன் ராஜினாமா செய்தனர்.
தற்போது அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நடிகர் சங்கத்தை கவனித்து வரும் நிலையில், விரைவில் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர்கள் பலரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் குறிப்பாக நடிகை ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது மலையாள திரை உலகில் பலரது புருவங்களை உயர வைத்துள்ளது.
மேலும் குணச்சித்திர நடிகர் ஜெகதீஷ், நடிகர் ரவீந்திரன், பாட்ஷா வில்லன் நடிகர் தேவன் உள்ளிட்ட ஆறு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஜெகதீஷ் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சங்க தலைவர் பொறுப்பிற்கு இப்போதைய சூழலில் பெண் ஒருவர் வருவது தான் சரியானதாக இருக்கும் என மோகன்லால், மம்முட்டி இருவருமே கருதுகிறார்களாம். அதனால் ஸ்வேதா மேனனுக்கு வலு சேர்க்கும் விதமாக நடிகர் ஜெகதீஷை அழைத்துப் பேசி அவரது வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி கூறியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
இவரை தவிர மற்ற நடிகர்களுக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்பதால் ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு எளிதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் சங்கத்தை பொறுத்த வரை பெரும்பாலும் நடிகைகள் உள்ளிட்ட பெண்களே குற்றச்சாட்டுகளை வைப்பதால், வரும் காலத்தில் அதற்கு ஒரு தீர்வாக ஒரு பெண் தலைவராக வருவது தான் சரியாக இருக்கும் என்பதால்தான் மோகன்லாலும் மம்முட்டியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.