ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வாரிசு நடிகர்கள் என்பதால் எளிதாக வாய்ப்பை பெற்று விட்டார்கள் என்று ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் மலையாள திரை உலகில் அற்புதமான நடிகர்களாக பிரித்விராஜும் பஹத் பாசிலும் தென்னிந்திய அளவில், ஏன் பாலிவுட் வரை புகழ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் சமீபத்தில் தனது முதல் பட வாய்ப்பு குறித்து புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் 12ம் வகுப்பு முடித்த கையோடு சினிமாவில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற்றது. இயக்குனர் பாசில் இயக்கும் படத்திற்காக நடைபெற்ற அந்த ஆடிசனில பிரித்விராஜுக்கு ஜோடியாக நடிகை அசினும் தனது முதல் படமாக கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜ் அதில் செட் ஆகவில்லை என்று தனது மகன் பஹத் பாசிலை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாசில்.
ஆனால் அவருக்கு ஜோடியாக அசின் பொருந்தவில்லை என்று கூறி அவருக்கு பதிலாக நிகிதாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாசில். ஆனால் அதே வருடத்தில் நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் ரஞ்சித் டைரக்ஷனில் நந்தனம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதேபோல அதற்கு அடுத்த வருடமே நடிகை அசினும் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை என்கிற படத்தில், பல பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் டைரக்ஷனில் அறிமுகமானார். பின்னாளில் மூவருமே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றனர்.




