‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்த முடித்திருக்கிறார் சூர்யா. அதையடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவரது மனைவியான நடிகை ஜோதிகா சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஷீஷெல்ஸ் என்ற அழகிய தீவுக்கு வெகேஷன் சென்றுள்ளார்கள். அங்குள்ள இயற்கை அழகை ஹெலிகாப்டரில் பயணித்தபடி அவர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள். உள்ளூர் உணவு வகைகளையும் ருசித்துள்ளார்கள்.
அந்த அமைதியான சூழலை தாங்கள் ரசித்து அனுபவித்த புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ஜோதிகா. அதோடு அந்த வீடியோவில், சொர்க்கத்தில் இன்னொரு நாள் நாம் இருவரும்... என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.