மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகளான தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இந்த பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தார். அதேசமயம் அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தை உடனடியாக நீக்கியும் விட்டார். இதற்கான காரணம் என்னவென்று ரசிகர்கள் பலர் குழம்பி வந்தனர்.
இந்த நிலையில் முதல் புகைப்படத்தில் நடிகர் சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். இன்னொரு புகைப்படத்தில் அதே உடையுடன் தாடியை எடுத்துவிட்டு சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திர கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு புகைப்படங்களையும் சேகரித்து வைத்திருந்த நெட்டிசன் ஒருவர் இரண்டையும் வெளியிட்டு, சூர்யா சிங்கம் 4 படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதற்காகத்தான் இந்த கெட்டப் என்றும், அது வெளியில் தெரிந்து விட்டால் படம் குறித்த தகவல் கசிந்துவிடும் என்பதால் உடனடியாக ஜோதிகா அந்த படத்தை நீக்கி உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு புகைப்படங்களையும், அதில் ஒன்றை ஜோதிகா நீக்கியதையும் பார்க்கும்போது அது சரிதானோ என்று தோன்றுகிறது.