நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
"புது ராகம் படைப்பதாலே... நானும் இறைவனே...'' இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து, உலகையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்.
இன்றும், தொலைதுாரம் பயணிப்போருக்கும். இரவுகளில் உறக்கம் வராமல் தவிப்போருக்கும், தோழனாய் தோள் கொடுப்பது இளையராஜாவின் இசையே. ஒரு தமிழனாய், இந்தியனாய், நமது இசையை உலகம் முழுக்க உச்சரிக்க செய்தவர். பத்ம விபூஷண் விருதைப் பெற்று உச்சத்தை தொட்டிருக்கிறார். 80 வயதில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இளையராஜா. இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்தாண்டு இளையராஜாவிற்கு ஸ்பெஷல் பிறந்தநாள் என்றே சொல்லலாம். காரணம் சிம்பொனி இசையை அமைத்த பின் அவர் கொண்டாடும் பிறந்தநாள் இதுவாகும். பொதுவாக தனது பிறந்தநாளின் போது இளையராஜா சென்னையில் இருந்தால் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். அதன்படி சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவில் காலை முதல் ரசிகர்களை சந்தித்தார் இளையராஜா. காலை கோடம்பாக்கம் ஸ்டூடியோவுக்கு வந்தபோது வாசலில் கூடியிருந்த ரசிகர்கள் வாழ்த்து மழை தெரிவித்தனர். பின்னர் ஸ்டூடியோவில் திரையுலகினர், நண்பர்கள் வாழ்த்தை அவர் ஏற்றுக்கொண்டார். கேக் வெட்டி பிறந்தநாளையும் கொண்டாடினார். ரசிகர்கள் மட்டுமின்றி ராமராஜன் போன்ற திரையுலகினரும் அவருக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.,வின் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாயெல்லாம் அடைத்துவிட்டது
இளையராஜா கூறுகையில், ‛‛வாயெல்லாம் அடைத்துவிட்டது. வார்த்தைகள் வரவில்லை. அடேயப்பா என்ன அன்பு. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல ரயில், பஸ், ஆட்டோ கிடைக்காமல் போராடி இங்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி. சிலர் தூக்கம் இல்லாமல் வந்து இருக்கிறார்கள். சிலர் என்னை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு வாரமாக தூங்காமல் தவித்து இருக்கிறார்கள். ஆண்டவன் அருளாசியுடன் என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி'' என தெரிவித்தார்.