சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
படம் : வரலாறு
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : அஜித், அசின், கனிகா
இயக்கம் : கே.எஸ்.ரவிகுமார்
தயாரிப்பு : நிக் ஆர்ட்ஸ்
அஜித் மூன்று வேடங்களில் நடித்த படம், வரலாறு. இப்படம் வெளியாவதற்குள், எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்தது. படம் வெளியானதே, ஒரு சாதனை தான்.
கடந்த, 1999ல் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், 'காட்பாதர்' என்ற தலைப்பில், கமலுக்கு ஒரு கதையை தயார் செய்தார். அவர் நடிக்க இயலவில்லை. ரஜினிக்கு அக்கதை பிடித்திருந்தாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட, ஜக்குபாய் படத்தில் நடிக்க துவங்கினார். அப்படத்தின் இயக்குனர், கே.எஸ்.ரவிகுமார் தான். ஆனால், சில காரணங்களால், ஜக்குபாய் படமும், 'டிராப்' செய்யப்பட்டது.
இதற்கு இடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பதாக இருந்த, மிரட்டல் படமும் கைவிடப்பட்டது. இதனால் அஜித், காட்பாதர் படத்தில் இணைந்தார். 2004ல் படப்பிடிப்பு துவங்கியது. பட்ஜெட், கால்ஷீட் என, பல்வேறு பிரச்னையில் சிக்கியபடி, மெல்ல வளர்ந்தது படம். இப்படத்தில் நடித்த காலத்தில், பாலாவின் நான் கடவுள் பட வாய்ப்பு, அஜித்திற்கு வந்தது. அதனாலும், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.
படத்தில் இருந்து, ஜோதிகா விலகியதை அடுத்து, அசின் நாயகியாக நடித்தார். தந்தை அஜித்தின் மனைவி கதாபாத்திரத்தில், மீனா, தேவயானி, சிம்ரன் என, 'ரவுண்ட்' சென்று, இறுதியில், கனிகா நடித்தார். பி.சி.ஸ்ரீராம், ப்ரியன் என, ஒளிப்பதிவாளர்களும் மாறினர். இதற்கு இடையில், அஜித் உடல் இளைத்திருந்தார். இதனால் படத்தில், அஜித்தின் உடலில் மாற்றம் தெரியும்.
வரி விலக்கு காரணமாக, படத்தின் தலைப்பு, வரலாறு என, மாறியது. இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் வெளியான வரலாறு, பெரும் வெற்றி பெற்றது. அதிலும் பரத கலைஞராக நடித்து, அஜித் ஆச்சரியப்படுத்தினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன.
வரலாறு படைப்பது சாதாரணம் அல்ல!