தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
படம் : திமிரு
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : விஷால், ரீமா சென், ஷ்ரேயா ரெட்டி, வடிவேலு
இயக்கம் : தருண் கோபி
தயாரிப்பு : ஜீ.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன்
செல்லமே படத்தில் அறிமுகமான நடிகர் விஷால், சண்டக்கோழியைத் தொடர்ந்து, இப்படத்தின் மூலம், 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார். இதன் மூலம், முன்னணி கதாநாயகரில் ஒருவரானார்.
மதுரையிலிருந்து, சென்னையில் உள்ள கல்லுாரியில் மருத்துவம் படிக்க வருகிறார் விஷால். ரவுடி கும்பல், விஷாலைத் தேடுகிறது. இதற்கிடையில் ரீமா சென், விஷாலை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இந்நிலையில் ரவுடி கும்பலுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்படுகிறது. ஏன் என்ற கேள்விக்கு பின், மதுரையில், பிரபல தாதாவின் தங்கை ஸ்ரேயா ரெட்டி, விஷால் மீது காதல் கொள்கிறார். எதிர்பாராத விபத்தில், ஸ்ரேயா ரெட்டி உயிரிழக்க, அவரின் அண்ணன்கள், விஷாலை கொலை செய்ய தேடுகின்றனர். விஷால் தப்பித்தாரா, ரீமா சென்னின் காதல் என்னவானது என்பது தான், கிளைமேக்ஸ்!
இப்படத்தில், மிகச் சரியான அளவில், ஆக் ஷன் மசாலா கலந்திருந்தது. படத்தின் மிகப்பெரிய பலமே, ஸ்ரேயா ரெட்டியின் ஈஸ்வரி கதாபாத்திரம் தான். 'ஏலேய் இசுக்கு, நல்லா இருக்கியாலே...' என, அவர் விடும் சத்தம், இன்றும் பலரது காதில் ஒலிக்கும். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் தான் என்றாலும், வித்தியாசம் காட்டி, மிரட்டிஇருந்தார், ஸ்ரேயா ரெட்டி.
இப்படத்தின் தயாரிப்பாளரான விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து, ஸ்ரேயா ரெட்டி திருமணம் செய்துக் கொண்டார். ஒதுங்கி வாழும் விஷாலின் பிளாஷ்பேக், அவரின் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்தது. வடிவேலுவின் காமெடி ரசிக்க செய்தது. படம், மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் மழையில் நனைந்தது.
இயக்குனர் தருண் கோபி, சில படங்களை எடுத்து தோல்வியை தழுவி, பின் நடிகராகவும் பரிணாமித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு, சிறந்த கலைஞர்கள் பலர் கிடைப்பர் என, எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அது பொய்த்து போனது, சோகம் தான்.
'நானும் மதுரைக்காரன் தான்டா' என, விஷால் திமிரு காட்டினார்!