ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
படம் : தம்பி
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : மாதவன், பூஜா, வடிவேலு, இளவரசு
இயக்குனர் : சீமான்
தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர்
'உபதேசம் பண்ணா எவன் கேக்கிறான்? உதைச்சாத் தான் கேக்கிறான்' என, விழிகளை உருட்டியபடியே மாதவன் மிரட்டிய படம், தம்பி. கடந்த, 1996ல், பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும், 2006ல் வெளியான, தம்பி படத்தின் வழியாகவே, அதிக கவனம் பெற்றார், சீமான்.
தமிழ் சினிமாவின், 'சாக்லேட் பாய்' நாயகனாக இருந்த மாதவன், ரன் படத்தின் மூலம் ஆக் ஷன் பாதைக்கு திரும்பினாலும், முழுமையான அதிரடி நாயகனாக மாறியது, தம்பி படத்தில் தான். இப்படத்தில், கண்களை இமைக்காமல் நடித்தார்!
தமிழ் நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க முன்வராததால், மாதவன் நடித்தார். 'என்ன நடக்குது இங்கே?' என, மாதவன் கேட்கும்போதெல்லாம், நமக்கும் சூடு பரவுகிறது. படத்தின் பலமே, வசனங்கள் தான். 'இங்கே, 'சைலன்ஸ்' என்பதையே, சத்தமாகத் தானே கூற வேண்டி உள்ளது. ஆயுதம் வாங்குற பணத்திற்கு அரிசி வாங்கியிருந்தால், இவ்வுலகத்தில் பசி இருந்திருக்காது...' உள்ளிட்ட வசனங்கள் கைத்தட்டல் பெற்றன.
படத்தில், பெரும்பாலும் ஆங்கில கலப்பின்றி, தமிழில் வசனம் இடம் பெற்றிருந்ததும், பாராட்டுகளை பெற்றது. தன் குடும்பத்தை அழித்த ரவுடிகளை பழிக்கு பழி வாங்காமல், அவர்களை திருத்த, அடிதடியை கையில் எடுக்கும் கதாநாயகன். இது தான், கதை.
மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடித்திருந்தார். பாடல்களிலும் சமூகக் கருத்துகள் பரவியிருந்தன. 'சுடும் நிலவு, பூவனத்தில், என்னம்மா தேவி ஜக்கம்மா...' பாடல்கள் ரசிக்க வைத்தன. கார்த்தி நடிப்பில், தம்பி என்ற பெயரில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது; தமிழில் தலைப்புக்கும் பஞ்சமா?
பேரன்பும், பெருங்கோபமும் உடையவன், சீமானின் தம்பி!