தமிழில் ரீமேக் ஆன ஹிந்தி வெப் தொடர் | கமல்ஹாசன் பெயரில் மோசடி : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை | உதயநிதிக்கு பதில் அளிக்க 'ஏஞ்சல்' பட தயாரிப்பாளருக்கு கோர்ட் உத்தரவு | பிளாஷ்பேக் : 24 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு தாய் பற்றி பேசிய படம் | கல்லுரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை வருமா? | சிறிய விபத்தில் சிக்கி, ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா | வேட்டையன் - 'மனசிலாயோ' பாடல் வெளியானது | 10 ஆண்டுகளுக்குப் பிறகான பிரிவுகள்… - அதிர்ச்சியடையும் ரசிகர்கள் | 'மெய்யழகன்' குழுவினரின் தமிழ்ப் பற்று | தமிழகத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' ? |
படம் : டிஷ்யூம்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : ஜீவா, சந்தியா, நாசர்
இயக்கம் : சசி
தயாரிப்பு : ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் பட்டியலில் சசிக்கு முக்கிய இடம் உண்டு. வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக, அடுத்தடுத்து படம் இயக்குவதில்லை; தனக்கான கதை கிடைக்கும் வரை காத்திருப்பார். கடந்த, 1998ல், சொல்லாமலே; 2002ல், ரோஜாக் கூட்டம் படங்களை இயக்கியவர், 2006ம் ஆண்டு தான், டிஷ்யூம் என்ற தன் மூன்றாவது படத்தை வெளியிட்டார்.
படகு வீட்டை அழகாய் வரையும் ஓவியக்கல்லுாரி மாணவிக்கும், அந்த படகு வீட்டில் தீப்பற்றி எரிய, ஒரு சண்டை காட்சி எடுக்கலாம் எனக் கூறும், சினிமா சண்டைக்காட்சி நடிகருக்கும் இடையே ஏற்படும் காதல் தான், டிஷ்யூம் படத்தின் கதை.
'டூப்' நடிகர்களின் வாழ்க்கையில் நிகழும் சோகங்களை, நகைச்சுவை துாவி சொல்லி இருந்தார், இயக்குனர். வாய்ப்பு நிறைய இருந்தும், ரத்தம் சொட்டும் சண்டைக் காட்சிகளை கவனமாய் தவிர்த்த விதத்தில், இயக்குனர் சசிக்கு பாராட்டுக்கள்.
'ரிஸ்க் பாஸ்கர்' கதாபாத்திரத்தில், ஜீவா அசத்தியிருந்தார். ராம், ஈ படங்களின் வரிசையில், டிஷ்யூம், சிறந்த நடிகராக வளர்ந்து வந்த நிலையில், கமர்ஷியல் படங்களில் ஆர்வம் காட்டியதால், ஜீவாவின் தனித்த அடையாளம் நொறுங்கியது. இப்படத்தில், 3 அடி உயரமே உள்ள பரூக், காமெடியில் கலக்கியிருந்தார். அவர் கடன் வாங்கும் காட்சிகளில், தியேட்டரில் கரகோஷம் எழுந்தது.
எஸ்.ஜே.சூர்யா, விஷால் ஆகியோர், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றனர். இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படம் சுக்ரன். இப்படத்தில் இடம்பெற்ற, 'பூமிக்கு வெளிச்சம், டைலாமோ, கிட்ட நெருங்கி -வாடா, நெஞ்சாங்கூட்டில், பூ மீது...' பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
காதல் இதயங்களின், டிஷ்யூம் அழகானது!