ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
படம் : சில்லுனு ஒரு காதல்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம்
இயக்கம் : என்.கிருஷ்ணா
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன்
சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியான படம், சில்லுனு ஒரு காதல். 'ஜில்லுனு' என்ற வார்த்தை வரிவிலக்கிற்காக, 'சில்லுனு' என மாறியது. கவுதம்மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த கிருஷ்ணா, இப்படத்தை இயக்கினார்.
ஜோதிகாவும், சூர்யாவும் திருமணத்திற்கு பின் காதலர்கள் போல வாழ்கின்றனர். இந்நிலையில், சூர்யாவின் பழைய டைரியை, ஜோதிகா பார்க்கிறார். அதில், சூர்யாவின் கல்லுாரி கால காதல் கதை இருக்கிறது. இதனால் ஜோதிகா, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, வீட்டிற்கு அழைத்து வருவார். அதன்பின் என்ன நடந்தது என்பது தான், படத்தின் கதை.
கல்லுாரி மாணவர், பொறுப்புள்ள குடும்ப தலைவர் என, சூர்யா இரு முகம் காட்டியிருந்தார். கல்லுாரி பருவத்தில் நடக்கும் காதல் கதையில், அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருந்தார், இயக்குனர். படத்தில், சூர்யா - ஜோதிகாவை விட, சூர்யா - பூமிகா ஜோடி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர், அசின். கிராமத்திற்கு வடிவேலு, நகரத்திற்கு சந்தானம் என, இரண்டு காமெடி நடிகர்கள் இடம் பெற்றிருந்தனர். 'என்னம்மா அங்க சத்தம்...' போன்ற காமெடி, இன்றும் 'மீம்ஸ்'களாக உலா வருகின்றன.
படத்தின் வெற்றிக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் முக்கிய பங்கு வகித்தது. 'முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம் உறங்கும், அவளுக்கென்ன அம்பாசமுத்திர...' பாடல்கள் ரசிக்கச் செய்தன. அந்தோணியின் எடிட்டிங்; ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்தன. இந்த படம், தெலுங்கில் நுவ் நேனு பிரேமா; மராத்தியில், து ஹாய் ரீ என, 'ரீமேக்' செய்யப்பட்டது.
படத்தின் தலைப்பு போலவே இருந்தது, சில்லுனு ஒரு காதல்!