'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
படம் : எம்டன் மகன்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : பரத், கோபிகா, நாசர், வடிவேல், சரண்யா
இயக்கம் : எம்.திருமுருகன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்
'டிவி சீரியல்' இயக்குனராக இருந்து, தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தவர், திருமுருகன். தந்தையின் கண்டிப்புக்கு பின்னால் கரிசனம் இருக்கும் என்பதை பாசம், காதல், சென்டிமென்ட், நகைச்சுவை கலந்து, ஆபாசமில்லாமல் அழகாக இயக்கியிருந்தார், திருமுருகன்.
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், எம்டன் மகன் என்ற தலைப்பு, எம் மகன் என்று மாற்றப்பட்டு, படம் வெளியானது. மளிகைக் கடை வைத்திருக்கும், கண்டிப்பு பேர்வழியான நாசரின் மகன் பரத், கல்லுாரியில் படிக்கிறார். கிடைக்கும் நேரத்தில், கடையில் தொழிலாளியாக வேலை செய்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நாசர், தன் மகனை புரிந்துக் கொள்ளாமல், தண்டிக்கிறார்; அவமானப்படுத்துகிறார். இந்நிலையில் தன் முறைபெண் கோபிகாவை காதலிக்கும் பரத், அவருடன் ஊரில் இருந்து சென்றுவிடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
படத்தின் நாயகன், நாசர் தான். அவரின் நடிப்புக்கு, 'சல்யூட்' வைக்கலாம். தமிழ் சினிமா, இன்னும் அவரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படத்தின் இன்னொரு நாயகன், வடிவேலு. மனிதர் வரும்போதெல்லாம், வெடித்து சிரிக்க, ரசிகர்கள் தயாராக இருந்தனர். சென்டிமென்ட் காட்சியிலும், வடிவேலு ஜொலித்தார்.
பக்கத்து வீட்டு பையன், பொண்ணு போல நடித்திருந்தனர் பரத்தும், கோபிகாவும். அவமானப்படுதல், கண்ணீர் சிந்துதல், காதல் என, பரத் நிறைவாக நடித்திருந்தார். வித்யாசாகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி கண்டது.
எல்லாருக்கும் பிடிக்கும் எம்டன் மகன்!