கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு |
படம் : சம்திங் சம்திங் (உனக்கும் எனக்கும்)
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு, பாக்யராஜ்
இயக்கம் : எம்.ராஜா
தயாரிப்பு : மோகன்
தெலுங்கு படங்களை, ரீமேக் செய்து, அண்ணன் எம்.ராஜா இயக்கத்தில், தம்பி ரவி நடித்த ஜெயம், எம்.குமரன் படங்கள் வெற்றி பெற்றன. இதையடுத்து ஜெயம் ரவி நடித்த தாஸ், மழை, இதயத்திருடன் படங்கள் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஜெயம் ரவிக்கு, அண்ணன் எம்.ராஜா கைக்கொடுத்தார். அவருக்கு, வழக்கம் போல, தெலுங்கு படமே கைக்கொடுத்தது; தந்தை மோகன் தயாரித்தார்.
பிரபுதேவா இயக்கத்தில், சித்தார்த் - த்ரிஷா நடித்த, நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா என்ற தெலுங்கு படத்தின், ரீமேக் உரிமை பெற்று, தமிழில், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தை உருவாக்கினர். தமிழில் பெயர் சூட்டினால், வரி விலக்கு கிடைக்கும் என்பதால், உனக்கும் எனக்கும் என, தலைப்பு மாற்றப்பட்டது.
கிராமத்து ஏழை கதாநாயகி; வெளிநாட்டில் வசிக்கும் பணக்கார கதாநாயகன். காதலுக்காக, கிராமத்தில் விவசாயம் செய்து கஷ்டப்படுகிறார். இடையில் கொஞ்சம் பணக்கார அம்மாவின் தொல்லை, கிராமத்து பெரிய மனிதரின் வில்லத்தனம் எனக் கலந்து, வெற்றிகரமான மசாலா படத்தை உருவாக்கியிருந்தனர்.
தெலுங்கில் இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், இப்படத்திலும் பணிபுரிந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. துறுதுறு லண்டன் வாசியாக ஜெயம் ரவியும், பாவாடை தாவணியில் பாந்தமாக த்ரிஷாவும் ரசிக்க வைத்தனர். பொம்மை குதிரையும், நட்சத்திரங்களும் கூட, ஒரு கதாபாத்திரம் போல இருந்தது. பிரபு, பாக்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பை, அளவுடன் வழங்கி இருந்தனர். கதாநாயகியராக நடித்த ரிச்சா பலோட், மல்லிகா ஆகியோர், இப்படத்தில் துணை நடிகையராக வலம் வந்தனர்.
அழகான காதல் படம் உனக்கும் எனக்கும்!