தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
படம் : ஈ
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி, ஆசிஷ் வித்யார்த்தி
இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்
தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்
மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது, கலைஞனின் கடமை. மூன்றாம் உலகப்போர், வெடிகுண்டு, அணுகுண்டு ஆயுதங்களால் நடக்காது; 'பயோ-கெமிக்கல்' ஆயுதத்தால் தான் நடக்கும் என, அறிஞர்கள் கூறுவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் படம், இயற்கை. இது, தேசிய விருது பெற்றது. பிற இயக்குனர் போல காதல், 'ஆக் ஷன்' என களமிறங்காமல், சமூகத்திற்கு தேவையான, 'பயோ-கெமிக்கல்' கொடூரம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார், எஸ்.பி.ஜனநாதன்.
இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதைக்களம், கம்யூ., சித்தாந்தம், விறுவிறுப்பான திரைக்கதை என, வேறு லெவல் படத்தைக் கொடுத்திருந்தார், இயக்குனர். 'கிராபிக்ஸ்' காட்சிகளில், கூடுதல் சிரத்தைக் காட்டியிருக்கலாம்.
டாக்டரான ஆசிஷ் வித்யார்த்தி, கெமிக்கல் ஆயுதங்களைத் தயாரித்து, அதை, ஏழை மக்கள் மீது செலுத்தி பரிசோதித்து, 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு விற்கிறார். ஆசிஷ் செய்யும் கொடூரம் பற்றி அறிந்த, போராளியான பசுபதி, அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். இதற்கு இடையில், சின்ன சின்ன திருட்டில் ஈடுபடும் ஜீவா குறுக்கிடுகிறார். தான் கையிலெடுத்த போராட்டத்தை, ஜீவாவின் கையில் ஒப்படைத்து, இறக்கிறார், பசுபதி. இதையடுத்து, ஜீவா என்ன செய்தார் என்பது தான், கிளைமேக்ஸ்!
ஜீவாவின் லோக்கல் ரவுடி கதாபாத்திரமும், பசுபதியின் போராளி கதாபாத்திரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. ஏழை மக்களை, புதிய மருந்துகளைச் சோதித்துப் பார்க்கப் பயன்படுத்தும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியைப் பற்றி பேசியது, ஈ. இது விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.