லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் |
படம் : இம்சை அரசன் 23ம் புலிகேசி
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : வடிவேலு, நாசர், மனோரமா, இளவரசு, ஸ்ரீமன்
இயக்கம் : சிம்புதேவன்
தயாரிப்பு : எஸ் பிக்சர்ஸ்
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்குப் பின், 28 ஆண்டுகள் கழித்து வெளியாகிய, சரித்திரக் கதை படம், இம்சை அரசன் 23ம் புலிகேசி. இதுவரை, இந்திய சினிமாவில், சரித்திர கதைகளை, யாரும், ஸ்பூப் செய்ததாகவும் சரித்திரம் இல்லை. அதை சாதித்துக் காட்டியது, இ.அ.23ம் புலிகேசி!
கார்ட்டூனிஸ்டாக இருந்த சிம்புதேவன், இப்படத்தின் மூலம் இயக்குனரானார். ஆதிகாலத்து, உத்தமபுத்திரன் படத்தின், ஆள்மாறாட்ட கதையின், ரீமேக் தான் இப்படம் என்றாலும், இப்படம் காமெடியை முன்னிறுத்தி, திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
புலிகேசி, உக்கிரபுத்தன் என, வடிவேலு, இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். அதில், மேல்நோக்கிய கூர் மீசையுடன் வந்த புலிகேசி தான், திரையரங்கை அதிரச் செய்தார். தேஜா ஸ்ரீ, மோனிகா என, இரு கதாநாயகியர். வா மா மின்னல்... என்பது போல வந்து, காணாமல் சென்றுவிடுவர்.
படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொருவர், மங்குனி அமைச்சராக வரும் இளவரசு. மனிதரின் உடலும், மொழியும், கககபோ! என, அடித்துச் சொல்லலாம். கரடி காறித் துப்பும் காட்சி, அரசு ஊழியரின் வாழ்க்கை, குளிர்பான நிறுவனம், ஜாதிச் சண்டை மைதானம், ஆயுதபேர ஊழல், தண்ணீர் சேகரிப்பு என, படத்தில் ஏகப்பட்ட, சூப்பர் காட்சிகள் இடம் பெற்றன.
கலை இயக்குனர், பி.கிருஷ்ணமூர்த்தியின் உழைப்பிற்கும், சபேஷ் - முரளியின் இசைக்கும், ஒரு பூங்கொத்து கொடுக்கலாம். இப்படத்தின் இரண்டாம் பாகம், இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் துவங்கியது. யார் கண்பட்டதோ, படம் பிரச்னையில் சிக்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் புலிகேசி வரணும்... நாங்க, வயிறு வலிக்க சிரிக்கணும்!