தொடரும் படத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட மோகன்லாலின் சோட்டா மும்பை ரீ ரிலீஸ் | ரிலீஸ் தேதியை நான் சொல்றேன் : கூலி துவங்கும்போதே லோகேஷ் போட்ட கண்டிஷன் | மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குனர் மறைந்து ஒரு வருடம் கழித்து வெளியாகும் படம் | உங்கள் அப்பாக்களுடனும் நடித்து உங்களுடனும் நடிப்பது ஆசீர்வாதம் தான் : நெகிழ்ந்த மோகன்லால் | அர்ச்சனா ரோல் மாடல் அர்ச்சனா | மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் | தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம் | டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை |
படம் : சண்டக்கோழி
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால்
இயக்கம் : லிங்குசாமி
தயாரிப்பு : ஜி.கே.பிலிம்ஸ்
கடந்த, 2005-ம் ஆண்டு வெற்றிப் படங்களில், சண்டக்கோழிக்கும் முக்கிய இடம் உண்டு. தியேட்டரில், 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ஆனந்தம், ரன் என, அடுத்தடுத்து மெகா ஹிட் கொடுத்த, இயக்குனர் லிங்குசாமி, ஜி படத்தில் சறுக்கினார். குதிரை போல சட்டென எழுந்து, சண்டக்கோழி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
சிதம்பரத்தில் இருக்கும், தன் கல்லுாரி நண்பர் வீட்டிற்கு வரும் விஷால், உள்ளூர் தாதாவான லாலுடன் மோதுகிறார். இதைத் தொடர்ந்து, விஷாலை பழிவாங்க, அவரது ஊரான மதுரைக்கு செல்கிறார் லால். அங்கு, ஊர் பெரிய மனிதரான ராஜ்கிரணின் மகன் தான், விஷால் என, தெரிய வருகிறது. இதையடுத்து நிகழும் ஆக் ஷன் பரபரப்பு தான், படத்தின் இரண்டாம் பகுதி.
இப்படத்தில் இடம்பெற்ற, விஷால் - மீரா ஜாஸ்மின் காதல் காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது. மீராவின் குறும்புத் தனத்திற்கு, பூங்கொத்து கொடுக்கலாம். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் மற்றும் சூர்யா. அவர்கள் நடிக்க மறுத்ததால், விஷாலுக்கு, 'பம்பர் பிரைஸ்' அடித்தது. விஷாலின் சினிமா பயணத்தில், சண்டக்கோழிக்கு மிக முக்கிய இடம் உண்டு.
இப்படத்திற்கு ஜீவா, நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருந்தனர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியிருந்தார். கன்னடத்தில், வாயுபுத்ரா என்றும்; ஒடியா மொழியில், கஞ்சா லதே என்றும், 'ரீமேக்' செய்யப்பட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. குறிப்பாக, 'தாவணி போட்ட தீபாவளி...' பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம், 2018ல் வெளியானது. முதல் பாகத்தின் விறுவிறுப்பையும், வெற்றியையும் பெற தவறிவிட்டது.
சிலிர்த்து நின்றது சண்டக்கோழி!