மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தை கொஞ்சம் லேட்டாக பார்த்து இருக்கிறார் நடிகை திரிஷா. ஆனாலும் படத்தை பாராட்ட தவறவில்லை. படம் குறித்து "என்ன ஒரு படம், என்ன மாதிரியான நடிப்பு என சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார். தாமதமாகப் பார்த்தாலும், படம் மிக அருமையாக இருந்தது. "நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும்" என்ற வாசகத்தை ஹைலைட்டாக குறிப்பிட்டுள்ளார். படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், பகவதி, குழந்தை நட்சத்திரம் கமலேசை மற்றும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தையும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். நான் சந்தித்த நாள் முதல் சிம்ரன் என் இன்ஸ்பிரேசன் எனவும் கூறியுள்ளார்.
மெளனம் பேசியதே படத்தில் திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனாலும், அவர் சிம்ரன் தோழியாக சின்ன வேடத்தில் ஜோடி படத்தில் தான் முதன்முதலில் திரையில் தோன்றினார். அந்த நட்பு, பாசம் அடிப்படையில் சிம்ரனை இப்படி பாராட்டியிருக்கிறார்.