சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஸ்ரீகருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் படம் 'வேட்டைக்காரி'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, காளிமுத்து காத்தமுத்து இயக்கி உள்ளார். ஏ.கே.ராம்ஜி இசையமைத்து உள்ளார். கே.ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சனா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி காளிமுத்து காத்தமுத்து கூறும்போது “வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் பேசும் படம். ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்” என்றார்.
'ரேணிகுண்டா' படத்தில் பாலியல் தொழிலாளியாக அறிமுகமான சஞ்சனா சிங் அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். அஞ்சான், தனி ஒருவன், நாய் சேகர் ரிட்டன் ஆகியவை அவர் நடித்த முக்கியமான படங்கள். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த நிலையில் 'வேட்டைக்காரி' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.




