சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'புரூப்'. ஐ ராதிகா என்பவர் இயக்கி உள்ள இந்த படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ருத்வீர் வதன் என்பவர் கதாநாயகனாக நடிக்க அசோக், ரித்விகா, இந்திரஜா மைம் கோபி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் மே-3ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தற்போது புரூப் படக்குழு நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.
புரூப் படக்குழு சார்பில் நாயகன் ருத்வீர், ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது படம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் சாய் தன்ஷிகா. அந்த வகையில் அவருக்கும், ரஜினிக்குமான நட்பை பயன்படுத்தி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் புரூப் படக்குழுவினர்.




