சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
சினிமா நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியானால் அது மிகவும் பரபரப்பாகி விடுகிறது. காலம் காலமாக இது இருந்து வருகிறது. இருந்தாலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் என்னென்னவோ தேடித் துருவி எடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு பார்வைகளை அள்ள வேண்டும் என்ற ஒன்றுதான் பிரதானமாக இருக்கிறது.
கடந்த வாரம் ரவி மோகன், கெனிஷா இருவரும் திருமண நிகழ்வு ஒன்றில் ஜோடியாகக் கலந்து கொண்டது மிகவும் வைரலானது. அதன்பின் ரவி மோகன் விளக்க அறிக்கை, அவரது மாமியார் தயாரிப்பாளர் சுஜாதா விளக்க அறிக்கை என அது விஸ்வரூபம் எடுத்தது.
இந்த வாரத்திற்கான பரபரப்பாக நடிகர் விஷால், நடிகை சாய்தன்ஷிகா திருமண அறிவிப்பு நேற்று வெளியாகி பரபரப்பை ஆரம்பித்து வைத்துள்ளது. இருவரும் ஒரு படத்தில் கூட ஒன்றாக சேர்ந்து நடித்ததில்லை. அப்புறம் எப்படி இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது என்று ரசிகர்கள் யோசித்தார்கள். தங்களுக்குள் 15 வருடங்களாகப் பழக்கம் என்று சாய் தன்ஷிகா நேற்று பேசியிருந்தார்.
இதனிடையே, விஷால் வயது என்ன ? சாய் தன்ஷிகா வயது என்ன ? இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் ஆராச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.
விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அன்று விஷாலுக்கு 48 வயது நிறைவடைகிறது. சாய் தன்ஷிகவுக்கு தற்போது 35 வயது முடிந்துள்ளது. இருவருக்குமான வயது வித்தியாசம் 13.
இதற்கு முன்பு விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட போது கூட இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 17 வருடங்களாக இருந்தது குறித்து நிறையவே விமர்சனங்கள் வெளிவந்தன.