2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'ரெபல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜு. சூர்யா, கிரித்தி ஷெட்டி நடிக்க பாலா இயக்கத்தில் ஆரம்பமான 'வணங்கான்' படத்திலும் நடித்தார் மமிதா பைஜு. ஆனால், அந்தப் படத்திலிருந்து சூர்யா விலகியதும், கிரித்தி, மமிதா ஆகியோரும் மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக வேறு நடிகர், நடிகைகளை வைத்து படத்தை எடுத்து வெளியிட்டார் பாலா.
சிறு வயதிலிருந்தே சூர்யாவின் ரசிகை நான் என மமிதா பைஜு ஏற்கெனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், 'வணங்கான்' வாய்ப்பு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல மிஸ் ஆனது. இருந்தாலும் இன்று பூஜையுடன் ஆரம்பமான சூர்யா 46 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் மமிதா.
விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வரும் மமிதா, அடுத்து சூர்யா படத்தில் நடிப்பதால் அடுத்த ஆண்டில் தமிழில் பேசப்படும் ஒரு நடிகையாக மாற வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 'பிரேமலு' மலையாளப் படம் மூலம் அவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் உண்டு. அடுத்த வருடம் அந்த ரசிகர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும்.