பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படமான சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஜித்து மாதவன். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது தொடர்ந்து இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் மலையாள நட்சத்திரங்கள் நடிப்பது சர்ச்சையை கிளப்பும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.