முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் பீஜூ மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு பீஜூ மேனன் தமிழில் மீண்டும் நடிக்கிறார். தமிழில் மஜா, ஜூன் ஆர், தம்பி, பழனி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடைசியாகப் தமிழில் 2014ல் போர்க்களம் என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.